Thursday 8 January 2015

பக்கத்து வீட்டுப் பாட்டி

பக்கத்து வீட்டுப் பாட்டி வந்திருந்தாங்க. முகம் ரொம்ப வாடிப் போய் இருந்தது.
“என்ன பாட்டி ரொம்ப டல்லா இருக்கீங்க”
“ஒண்ணுமில்லம்மா”
“சரி .காலையில என்ன டிஃபன் சாப்பிட்டீங்க”
“ஒண்ணும் சாப்பிடல கண்ணு”
“ஏன் பாட்டி. இவ்ளோ நேரமாச்சு. இன்னுமா சாப்பிடல”
“காலையில மருமவளோட ஒரே சண்ட . நான் சமைக்குறது பிடிக்கலியாம். உப்பு ,ஒறப்பு சரியில்லேன்னு சொல்றா. அப்போ நீயே சமைச்சுக்கோன்னு சொல்லிட்டேன். அந்தக் கோவத்துல அவளும் சமைக்காம கெளம்பிப் போய்ட்டா. நானும் கெடக்கட்டும்னு ஒண்ணும் செய்யல”
“ம்ம் ..சரி பாட்டி. என் வீட்ல சமைச்சுட்டேன். இருங்க கொஞ்சம் சாப்பாடும் கொழம்பும் தரேன் சாப்பிடுங்க”
“அய்ய வேணாங்கண்ணு. எனக்குப் பசிக்கல”
“அதெப்படி பசிக்காம இருக்கும். இருங்க வரேன்”ன்னுட்டு சாப்பாடு எடுத்துட்டு வந்து கட்டாயப்படுத்தி சாப்பிட வச்சேன்.
அவங்க கண்ணெல்லாம் கலங்கிருச்சு.
சாப்பிட்டு முடிச்சு கை கழுவிட்டு “எனக்குக் கொஞ்சம் கொழம்பு மட்டும் தறியாம்மா”
“தரேன் பாட்டி. கொழம்பு நல்லா இருக்கா ?”
“சாயங்காலம் என் மருமவ வந்ததும் சாப்பிடச் சொல்றேன் கண்ணு. அதுவே முடிவு பண்ணிக்கட்டும் நான் நல்லா சமைக்குறேனா இல்லையான்னுட்டு”
அடங்கொக்காமக்கா   

11 comments:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : காயத்ரி தேவி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என்னில் உணர்ந்தவை

    வலைச்சர தள இணைப்பு : மகளிர் மட்டும்

    ReplyDelete
  2. இன்று வலைச்சரத்தில் அறிமுகங்கண்டு வந்தேன்..

    மனித மனம் தான் எவ்வளவு மகத்தானது!..

    நயம்படும் குறுங்கதை.. அருமை!..

    ReplyDelete
  3. வலைச்சரத்தில் தந்த அறிமுகத்தில் வந்தேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வலைச்சர அறிமுகத்தில் வந்தேன்.. ரசித்தேன்..

    ReplyDelete
  5. வலைச்சர அறிமுகத்தில் வந்தேன்.. ரசித்தேன்..

    ReplyDelete
  6. வலைச்சரம் மூலம் தங்கள் பதிவிற்கு வந்தேன். பதிவை இரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்! வலைச்சரத்தில் நானும் உங்களை அறிமுகம் செய்ததாய் நினைவு! இன்று மீண்டும் வலைச்சர அறிமுகம் மூலம் வருகை தந்துள்ளேன்! அருமை! தொடர்கிறேன்!

    ReplyDelete
  8. வலைச்சர அறிமுகத்தில் வந்தேன்..அருமை மா... தொடர்வேன்... :)

    ReplyDelete
  9. semmma! :D :D I was expecting something emotional!

    ReplyDelete
  10. வழக்கம்போல அசத்திடீங்க...உங்க நகைச்சுவைக்கு நான் ரசிகனாகிவிட்டேன். தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள்!!

    ReplyDelete
  11. அருமை ... நகைச்சுவை நிறைந்த குறுங்கதை ...நன்றி!
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete